எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், நியூயார்க் நகரிலிருந்து லண்டனுக்கு விரைவில் செல்லும் திட்டத்தை அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மஸ்க், பல்வேறு புதிய திட்டங்களை முன்வைக்கிறார். சமீபத்தில், இந்தியாவின் தலைநகர் டெல்லியிலிருந்து அமெரிக்கா செல்ல 40 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என அவர் தெரிவித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார், மேலும் பயணத்தின் முறைகள் குறித்து தாம் திட்டமிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், மஸ்க் புதிய அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலம், கடலின் அடியில் பயணித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து லண்டனுக்கு செல்ல முடியும்.இந்த பயணத்திற்கு ஒருமணிநேரம் மட்டுமே ஆகும் என அவர் கூறுகிறார். இந்த திட்டத்தை செயல்படுத்த மஸ்கின் போரிங் நிறுவனம் 20 பில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டுள்ளது. அட்லாண்டிக் கடலுக்கடியில் 4,800 கிலோமீட்டர் நீளத்தில் சுரங்கப்பாதை அமைத்து, அதில் அதிவிரைவு ரயில்களை இயக்குவதன் மூலம், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கிடையிலான பயண நேரத்தை குறைக்க முடியும் என மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

