காதலியை கரம் பிடிக்கும் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

உலகம் சிறப்பு செய்திகள் விளையாட்டு

பிரபலமான கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜியானா ரோட்டரிக்குயூசை திருமணம் செய்ய உள்ளார். திருமணம் செய்யாமல் காதலித்து வந்த இந்த ஜோடிக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். ஜார்ஜியானா மற்றும் ரொனால்டோ 2016ம் ஆண்டு ஸ்பெயினில் சந்தித்தனர். அப்போது கூக்கி நிறுவனத்தில் விற்பனையாளராக ஜார்ஜியானா இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு உருவானது. இந்த நட்பு 2017ம் ஆண்டு காதலாக மாறியது. அதன் பிறகு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அலானா மாட்டினா மற்றும் பெல்லா என்ற பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இந்த தம்பதியினருக்கு கடந்த 2022ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு குழந்தை உயிரிழந்தநிலையில் ரொனால்டோவும் அவருடைய காதலியும் மிகவும் துயரத்தில் இருந்தனர். தன் காதலிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ, விலை உயர்ந்த வைர மோதிரத்தை பரிசாக வழங்கி தம்மை திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்கிறார். இதற்கு ஜார்ஜினாவும் சரி என்று கூறிய நிலையில் மோதிரத்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *