அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர் செல்வி சவிதா சண்முகசுந்தரம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த துயரச் செய்தி தமிழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வி சவிதா சமூகப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தவர். குறிப்பாக, ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தன்னார்வ சேவையில் செயல்பட்டார். அவர் அமெரிக்காவின் முன்னணி கல்வி நிறுவனமான The University of Texas ஆஸ்டினில் இரட்டை இளங்கலைப் பட்டப்படிப்புகளை பயின்று கல்வியில் சிறந்து விளங்கினார். இளம் வயதிலேயே சாதனைகள் புரிந்த அவரது இழப்பு குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பெரிய துயரமாக உள்ளது.இந்த கடினமான நேரத்தில் துயரத்தில் உள்ள குடும்பத்தாருக்கு உலகத் தமிழ் சமூகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலும் மனமார்ந்த அனுதாபங்களும் தெரிவிக்கப்படுகின்றன.

