உணவுப் பாக்கெட்டுகளில் ஸ்டாப்லர் பின் பயன்படுத்த தடை! புதிய உத்தரவை வெளியிட்ட உணவுப் பாதுகாப்பு ஆணையம்

ஆரோக்கியம் இந்தியா இயற்க்கை சிறப்பு செய்திகள்

உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின்கள், வயர்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடுமையான உத்தரவை வெளியிட்டுள்ளது.சமீப காலமாக அலங்கார கேக்குகள், இனிப்பு பெட்டிகள் மற்றும் உணவுப் பார்சல்களில் பயன்படுத்தப்பட்ட உலோக ஊசிகள் மற்றும் ஸ்டேப்ளர் பின்களை பொதுமக்கள் தவறுதலாக விழுங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பும் செய்தித்தாள்களில் உணவுப் பொருட்களை மடித்து வழங்கக் கூடாது என்று FSSAI அறிவுறுத்தியிருந்தது. காரணம், செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் அச்சு மையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.தற்போது வெளியிடப்பட்ட புதிய உத்தரவின்படி, அலங்கார கேக்குகள், கேக் பெட்டிகள், இனிப்பு பெட்டிகள், தின்பண்ட பொட்டலங்கள், உணவுப் பார்சல்கள் மற்றும் அனைத்து வகையான உணவுப் பாக்கெட்டுகளிலும் உலோக ஊசி, ஸ்டேப்ளர் பின் அல்லது வயர்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.இந்த விதிமுறைகளை மீறும் உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் FSSAI எச்சரித்துள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் மட்டுமே பேக்கிங் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *