தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் கருத்துக்கு, கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தில் அரிதான கனிம வளங்கள் அதிகம் இருப்பதால், அதை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். ரஷ்யா மற்றும் சீனாவின் கப்பல்கள் அந்தப் பகுதியில் அதிகம் இருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு முக்கியம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இதற்கு பதிலளித்த கிரீன்லாந்து பிரதமர், “கிரீன்லாந்து எங்கள் வீடு. இது விற்பனைக்கு அல்ல. எங்கள்மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம்” என்று திட்டவட்டமாக கூறினார். பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அது சர்வதேச சட்டத்தை மதிக்கும் முறையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அமெரிக்கா நீண்ட காலமாக நண்பர் நாடாக இருந்தாலும், கிரீன்லாந்தை இணைத்துக் கொள்ளும் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

