குட் பேட் அக்லி திரைப்படம் பெண்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.

சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு பெண்கள் பொழுதுபோக்கு

நடிகர் அஜித் குமார் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க்கிய குட் பேட் அக்லி” திரைப்படம், இன்று காலை 9 மணிக்கு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அஜித்துடன் இணைந்து, நடிகர்கள் த்ரிஷா, சுனில், சிம்ரன், அர்ஜுன் தாஸ், யோகி பாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் உள்ள பிரபல மல்டி பிளக்ஸ் திரையரங்கில் பெண்களுக்காக fdfs சிறப்பு காட்சி திரையிடப்பட்டது .பெண்களுக்கான சிறப்பு காட்சி அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று முடிந்துவிட்டன என்று திரையரங்கத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படம் முடிந்த பிறகு, சிறப்பு காட்சியில் கலந்து கொண்ட அனைத்து அஜித் ரசிகைகளுக்காக திரையரங்கு சார்பில் மதிய உணவின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.பெண்களுக்கான சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்த திரையரங்கு நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *