சீனாவுக்கு 104% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா, சீனாவுக்கு விதிக்கப்பட்ட 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெறுவதற்கான 24 மணி நேர காலக்கெடு முடிந்த நிலையில், சீனாவுக்கு 104% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். சீனா தனது 34% வரியை நீக்கவில்லை என்றால், ஏப்ரல் 9-ம் தேதி முதல், சீனாவுக்கு 50% கூடுதல் வரிகள் அமெரிக்கா விதிக்கும். இதற்கிடையில், சீனாவுடன் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். மேலும், பிற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த நாளில் எச்சரித்துள்ளார். 24 மணி நேர கெடு முடிந்த பிறகு, அமெரிக்கா மீது 34 சதவீத வரி விதிப்பு சீனா மீண்டும் பெறவில்லை. இதற்குப் பிறகு, சீனாவுக்கு 104 சதவீத வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த வரி புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இந்தியா மற்றும் சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் அதிக இறக்குமதி வரி விதிக்கப்படும் என கூறியுள்ளார், இதற்கேற்ப அமெரிக்க பொருட்களுக்கு அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி ட்ரம்ப் அறிவித்தார்.
இந்தியாவின் இறக்குமதிக்கான வரி கட்டுப்பாடுகள் 27 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசத்திற்கு 37 சதவீதம், வியட்நாமுக்கு 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதம், ஜப்பானுக்கு 24 சதவீதம், இந்தோனேசியாவுக்கு 32 சதவீதம், பாகிஸ்தானுக்கு 29 சதவீதம் மற்றும் தாய்லாந்துக்கு 36 சதவீதம் என வரி விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வரி 10 சதவீதம் ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும், மேலும் கூடுதல் வரி ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல நாடுகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. மேலும், ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து அனைத்து அமெரிக்க பொருட்களுக்கு 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இது, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு சீனாவின் பதிலாக அமைந்ததாக சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.