ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் மிக விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாடிற்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான போட்டியில் விளையாடிய போது வலது முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டது. முழங்கை எலும்பு முறிவு காரணமாக, தற்போதைய சீசனில் இருந்து விலகியுள்ளார். அவரது தலைமையில் விளையாடிய சென்னை அணி, இந்த சீசனில் 5 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். நாளை சேப்பாக்கத்தில் நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோனி கேப்டனாக செயல்படவுள்ளார்.இது வரை 235 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையில், சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
