புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்; நேர மாற்றம் காமராஜர் பிறந்த தினம் முதல் அமலுக்கு வருகிறது

இந்தியா கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. Advertisement
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டம் இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளதால் அரசுப் பள்ளிகளிள் செயல்படும் நேரங்களை மாற்றியமைத்து கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு உணவு இடைவேளை விடப்படுகிறது. அதன்பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.
இடையில் இருமுறை 10 நிமிடங்கள் இடைவேளை விடப்படுகிறது. இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கேற்ப 8 பாடவேளைகளாக பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *