வானில் 6 கோள்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பதை வெறும் கண்ணால் காணலாம்.

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா இயற்க்கை உலகம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி விண்வெளி சார்ந்தவை

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் ஒரே வரிசையில் காணப்படும் அரிய நிகழ்வை கண்களால் காணலாம். இதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் இன்று (ஜன. 22) முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒருவருக்கொருவர் சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் சில நேரங்களில் நிகழ்கின்றன. இதன்படி, 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வரும் இந்த அரிய நிகழ்வு தற்போது நடைபெற உள்ளது. வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படுகின்றன. மனித கண்களால் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களை காணலாம், மேலும் நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்களை காண்பதற்காக சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்கோள்களை காண்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள், அறிவியல் அமைப்புகள் சார்பில், நாடு முழுவதும் இன்று முதல் 25-ம் தேதி வரை மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா மையத்தில், வரும் 25-ம் தேதி வரை, தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் கோள்களை காணலாம். வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது, “கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவில்லை. பூமியில் இருந்து பார்க்கும்போது, இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன. வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கிரகங்களை வீட்டின் மாடி, மைதானங்கள் அல்லது கடற்கரையில் இருந்து காணலாம். செவ்வாய் கிரகம் இரவு 9 மணிக்கு உதயமாகும். யுரேனஸ் மற்றும் நெப்டியூனை சக்திவாய்ந்த தொலைநோக்கியால் மட்டுமே காணலாம். இவ்வாறான 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் பிப். 28 மற்றும் ஆக. 29 ஆகிய நாட்களிலும் நடைபெறும்” என அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *