சென்னையில் பிரம்மாண்ட புதிய சட்டமன்றம் & தலைமைச் செயலகம்! முதல்வர் விஜய் அறிவிப்பு

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், புதிய கட்டட வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படும் என்றும், இதற்காக சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய வளாகத்தில் சட்டப்பேரவை கூட்டங்கள் நடைபெறுவதற்கான நவீன அரங்கம், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், தலைமைச் செயலகத்தின் பல்வேறு நிர்வாகப் பிரிவுகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு நவீன அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.தற்போதைய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை செயல்பாடுகளுக்கு ஏற்படும் இடப்பற்றாக்குறை, நிர்வாகத் தேவைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த புதிய வளாகத் திட்டம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *