2026 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ தேர்வாக ”ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி திரைப்படம் தேர்வாகி உள்ளது.
நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ”ஹோம்பவுண்ட்’. இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இந்தப் படம் சமீபத்தில் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது, அங்கும் பாராட்டுகளைப் பெற்றது. இப்படம் வருகிற 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் 98-ஆவது ஆஸ்கா் விருதுகளுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவின் ”ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி திரைப்படம் தேர்வாகி உள்ளது. ஆஸ்கா் விருது விழா மார்ச் 15, 2026 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது.
