பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 என 12 சிலிண்டர்களுக்கு பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் 9 கோடி பேருக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “குவாட் அமைப்பில் இருந்த போதும் கூட, அமெரிக்க அழுத்தங்களை பொருட்படுத்தாது இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறது. பாகிஸ்தானில் இதுமாதிரியான சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை எட்டவே நான் பாடுபட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னும் இவர் பதவியில் இருந்த போதே மோடியை பல முறை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.