மூன்று நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சென்றது இதுவே முதல் முறை ஆகும். அமெரிக்காவில், குவர்ட் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, மேலும் குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றினார். பின்னர், குவாட் அமைப்பின் தலைவர்களை சந்தித்து உரையாடினார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். பிரதமர் மோடி தனது பயணத்தின் போது பல உலக தலைவர்களையும் சந்தித்தார், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்தித்தார். பிரதமர் மோடி அமெரிக்கா வாழ் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.அமெரிக்க பயணம் நிறைவடைந்தையடுத்து இந்தியா புறப்பட்ட மோடி இன்று இரவு டெல்லி வந்திறங்கினார். அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

