டில்லியில் பிறந்து வளர்ந்தவரான சுனில் சோப்ரா நேற்று மத்திய லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் அந்நகரின் மேயராக பதவியேற்று கொண்டார். இதற்கு முன்னதாக அவர் 2014 – 15ல் அந்நகர மேயராக இருந்துள்ளார். 2013- 14ல் போரோ ஆப் சவுத்வார்க் நகரின் மேயர் பதவியை வகித்துள்ள முதலாவது இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. இவர் மூன்று முறை துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார். 1979ல் பிரிட்டன் சென்ற சோப்ரா, அங்கு ரீடெயில் கடையை துவங்கி தனது வாழ்க்கையை துவக்கினார். இவர் 1973- 74 ல் டில்லி பல்கலையின் சுப்ரீம் கவுன்சிலர் பதவியையும், பின்னர் தேசிய மாணவர் சங்கத்தின் டில்லி தலைவர் பதவியிலும் இருந்துள்ளார்.
