இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயற்படுத்தி முதல் செய்தி வாசிப்பாளர் அறிமுகம் – ஒடிசாவில் தொலைகாட்சி நிறுவனம் அசத்தல்

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வினோதங்கள்

அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினி தொழில் நுட்பமானது ஆர்டிபிஸியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளை அடந்து வருகிறது. இந்த வளர்ச்சி வரும் காலங்களில் தேவை என்றாலும் கணினி தொழில் நுட்பத்தை கொண்டே மனிதர்கள் செய்யும் வேலைகளை இந்த செயற்கை நுண்ணறிவை வைத்தே செய்து விடலாம் என்று கூறுகின்றனர்.
சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவானது இந்தியாவிலும் கால்பதிக்க ஆரமித்து விட்டது என்று கூட சொல்லலாம். ஏனெனில், ஒடிசாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை உருவக்கியுள்ளது. இது இந்தியாவின் முதல் பெண் செயற்கை நுண்ணறிவு வாசிப்பாளரை ஒடிசா மாநிலத்தில் உள்ள செய்தி நிறுவனமாக ஒடிசா டெலிவிஷன் லிமிடெட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு லிசா என்று பெயர் சூட்டிஉள்ளனர். இந்த செய்தி வாசிப்பாளர் பல்வேறு மொழிகளில் செய்தி வாசித்து வருகிறார். பார்ப்பதற்கு அசல் செய்தியாளரை போலவே காட்சியளிக்கிறது லிசா. நாம் எல்லாம் செய்தியாளர்களை பார்த்தால் பொம்மையை போலவே இருக்கிறார்களே என்று நினைத்து இருப்போம். ஆனால் தற்போது உள்ள நிலையில் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளருக்கும், உண்மை செய்தி வாசிப்பளர்களுக்கும் வித்தாயம் தெரியாத வகையில் உள்ளது என்று கூட சொல்லலாம். காலங்கள் மாற மாறா தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் வளர்ந்து கொண்டே தான் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *