சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; திருவனந்தபுரம் மண்டலம் 99.1% தேர்ச்சியும் நாட்டிலேயே முதலிடம்

இந்தியா உயர்கல்வி கடந்த நிகழ்ச்சிகள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச்சில் நடந்தது. நாடு முழுவதும் 38 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று மே 13ம் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 87.98% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 91.52%, மாணவர்கள் 85.12% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் 99.91 சதவீதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது. 99.04 சதவீத தேர்ச்சியுடன் விஜயவாடா மண்டலம் 2-வது இடமும் 98.47 சதவித தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3-வது இடம் பிடித்துள்ளதுள்ளது. 78.28 சதவீத தேர்ச்சியுடன் உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜ் மண்டலம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.இந்நிலையில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *