உலகின் அழகான பெண்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் தீபிகா படுகோன் 9-வது இடம்

அழுகு குறிப்புக்கள் ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் விளம்பரங்கள்

பெண்களின் முகவெட்டு, கண்கள், புருவங்கள், மூக்கு, உதடுகள், கன்னம், மற்றும் தாடை என ஒவ்வொன்றும் எந்த அளவில் இருக்க வேண்டும் என, பண்டைய கிரேக்கர்களின் சரியான விகிதாச்சாரத்தின் படி கணிக்கப்பட்டதில், உலகில் மிகவும் அழகான 10 பெண்களில் நடிகை தீபிகா படுகோனும் இடம்பிடித்துள்ளார். இந்த முக விகிதாச்சாரத்தையே தமிழர்கள் சாமுத்திரிகா லட்சணம் என கூறுவது உண்டு.
இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளனர் Jodie Comer, 29 வயதான இவருக்கு உடல் முழுமையையும் அளவிடும் போது, கோல்டன் ரேஷியோவில் 94.52% துல்லியமாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவருடைய கண்கள், புருவங்கள், மூக்கு, உதடுகள், கன்னம், தாடை மற்றும் முக வடிவம் ஆகியவை அளவிடப்பட்டு, பண்டைய கிரேக்கர்களின் சரியான விகிதாசார பண்புக்கூறுகளின் கருத்துக்கு மிக நெருக்கமாக உள்ளது.
9-வது இடத்தில், பாலிவுட் திரையுலகின் பியூட் குயின் நடிகை பிடித்துள்ளார். 91.22% மதிப்பெண்களை இவர் பெற்றுள்ளார். மேலும் இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது புருவம் தான் இவரின் மிகப்பெரிய பிளஸ் என குறிப்பிட்டுள்ளனர். இவரது புருவம் கோல்டன் ரேஷியோ மதிப்பீட்டில் 95.6 சதவீதம் ஒற்று போய் உள்ளது. முதலிடம் பிடித்த ஜோடி கமரில் புருவம் கோல்டன் ரேஷியோவில் 89% வீதம் மட்டுமே ஒற்று போய் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் HoYeon Jung என்பவர் 89.63% 10 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *