உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கிய ஜப்பான்.

அரசியல் உலகம் சிறப்பு செய்திகள் ஜப்பான்

ஜப்பான் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தியை தொடங்கியுள்ளது. டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (TEPCO) நிர்வகிக்கும் இந்த அணுமின் நிலையம் ஜப்பானின் நிகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. நிகாட்டா அணுமின் நிலையம் மொத்தமாக 8,212 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். பல ஆண்டுகளாக பாதுகாப்பு சோதனைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நிலையம், தற்போது அரசின் அனுமதியுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த அணுமின் நிலையம் மீண்டும் செயல்படுவதால், ஜப்பானின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய பெரிதும் உதவும் என அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக எரிபொருள் இறக்குமதி செலவுகளை குறைக்கவும், கார்பன் உமிழ்வை தாழ்த்தவும் இது முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு புகுஷிமா அணு விபத்திற்குப் பிறகு கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகே இந்த உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *