தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிப்ரவரி 8, அன்று நடைபெற்ற தேர்வின்போது, நூற்றுக்கணக்கான தேர்வர்களின் தேர்வு மையம் திடீரென மாற்றப்பட்டதை எதிர்த்து தேர்வர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த குழப்பத்தால் தேர்வு நடைமுறை பாதிக்கப்பட்டதால், தேர்வை தமிழ்நாடு முழுதும் ரத்து செய்து TNPSC. இந்நிலையில்தற்போது TNPSC வெளியிட்ட அறிவிப்பின்படி, குரூப் 2 மற்றும் 2A மெயின்ஸ் மறுதேர்வாக 2026 மார்ச் 15 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹால் டிக்கெட் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

