மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வருகிற ஜூன் 9ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். தொடர்ந்து 10ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். 12ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். ரூ.10 ஆயிரம் டெபாசிட் பணம் கட்ட வேண்டும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு எந்த எம்எல்ஏக்களும் முன்மொழியவில்லை, அதனால் அவர்கள் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *