நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு 2024; டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளம்பர செய்திகள் வினோதங்கள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29ம் தேதியை ‘லீப்’ ஆண்டு தினம் என்பார்கள். அதன்படி இன்று பிப். 29ம் தேதி என்பதால், இன்றைய தினத்தை கொண்டாடும் வகையில் ‘லீப்’ தின ‘டூடுல்’ ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.அதில் பிப். 28க்கும் மார்ச் 1ம் தேதிக்கும் இடையே பிப். 29ல் ஒரு தவளையின் படத்தை இட்டு அது தாவிவந்து அமர்ந்து சிரிப்பது போல் வடிவமைத்துள்ளது. தவளை தாவிச் செல்லும்போது பிப். 29 மறைந்துவிடுகிறது. இந்த அமைப்பு ஒரு குளத்தின் பின்னணியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரியின் இந்த போனஸ் தினத்தைக் கொண்டாடவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *