தமிழகத்தில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடு; அண்ணாமலை, தமிழிசை மற்றும் எல். முருகன் பெயர்கள் இடம்பெற்றுள்ளன

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் தாமரை சின்னத்திலேயே போட்டியிட உள்ளன. அந்த வகையில், 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமனாலும் வெளியாகும் என்று அண்ணாமலை இன்று கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை முதல் கட்டமாக அக்கட்சி வெளியிட்டுள்ளது.
கோவை: அண்ணாமலை
தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன்
தூத்துக்குடி: நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரி: பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய சென்னை: மனோஜ் பி செல்வம்
வேலூர்: ஏசி சண்முகம் கிருஷ்ணகிரி: நரசிம்மன்
நீலகிரி (தனி): எல் முருகன் பெரம்பலூர்: பாரிவேந்தர் (ஐ.ஜே.கே)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *