வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை நீர் ஆதார ஏரிகள் நிரம்பின

இந்தியா செய்திகள் தமிழ்நாடு மற்றவை விவசாயம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும். வருகிற பிப்ரவரி மாதம் கண்டலேறு அணையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னையின் குடிநீர் கையிருப்பு 9.99 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. இதனால், அடுத்தாண்டு கோடையை சமாளிக்க முடியும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம்-ஆந்திரா இடையேயான நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் இருந்து 12 டி.எம்.சி. தண்ணீர் 2 கட்டமாக தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு இன்னும் சில நாட்களில் 10 டி.எம்.சி.யை எட்டிவிடும்.
குடிநீரை வழங்கும் முக்கிய ஆதாரங்களாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி., ஆகும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில், பொதுப்பணித் துறைக்கு உட்பட்ட 1,020 ஏரிகளில், 516 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. தவிர, 343 ஏரிகள், 90 சதவீதம் நிரம்பியுள்ளன. 120 ஏரிகள், 70 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளன. 41 ஏரிகள், 50 சதவீதம் நிரம்பி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *