இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி இருவரின் உரையாடல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய பசிபிக் பகுதியில் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு சில வாரங்களுக்கு முன் கனடா தனது விரிவான திட்டத்தை அறிவித்தது. இதனையொட்டி கனடாவிற்கு தங்களது ஆதரவு மட்டும் இந்திய பசிபிக் பிராந்தியத்தில் எவ்வாறு பாதுகாப்பை அதிகரிப்பது போன்ற விஷயங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனடா வெளியுறவுத்துறை அமைச்சரிடம் விவாதித்துள்ளார்.
சீனா சமீபத்தில் தனது ராணுவ நடவடிக்கைகளை பசிபிக் எல்லையில் அதிகரித்திருப்பதால் ஏற்படும் ஆபத்து மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இதனை இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். “கனடா அமைச்சர் மெலனி ஜோலியுடன் விவாதித்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது” என்று ஜெய்சங்கரும், “இந்தியா G20 தலைமைக்கான முக்கிய அம்சங்கள் மற்றும் ஒத்துழைப்பு போன்றவைகள் விவாதித்தோம்” என்று மெலனி ஜோலியும் தெரிவித்துள்ளனர்.