முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து.

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நீண்ட நாட்களாக நடந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதியாக நிறைவு பெற்றது. ஆரம்பத்தில் தொகுதி எண்ணிக்கையைப் பற்றி இரு தரப்பும் கருத்து வேறுபாட்டில் இருந்தன. 25 தொகுதிகள் வழங்கும் முன்மொழிவு குறித்து விவாதம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்ந்துள்ளதால் கூடுதல் தொகுதிகள் வழங்க முடியாது என திமுக தெரிவித்திருந்தது.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும், 1 மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 தேர்தலில் 25 இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை 3 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களவை வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சிவா 6வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *