முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், திமுகவில் இணைந்துள்ளார்.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கி செயல்பட்டு வந்தார். அவர் பலமுறை அதிமுகவில் சேர முயற்சித்த போதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை.சமீபத்தில் திமுகவிற்கு ஆதரவாக பேசி வந்த அவர், இன்று பிப்ரவரி 27 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மேலும்அவரது மகன் ரவிந்திரநாத்தும் தி மு க வில் இணைந்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ops திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனைத் தொடர்ந்து, திமுகவில் அவருக்கு என்ன பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

