பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார். இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே 27 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் அவர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கண்காட்சியை பார்வையிட்டு, அங்கிருந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொடக்க நிறுவனங்களின் முயற்சிகளை அறிந்தார்.இதற்குப் பிறகு, விஞ்ஞானிகள், தொழில்முனைவர்கள் மற்றும் நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். விவசாயம், நீர் மேலாண்மை, சுகாதாரம், டிஜிட்டல் சேவைகள், செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இணைந்து செயல்பட பெரிய வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். மேலும், இஸ்ரேலிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து, தொழில்நுட்ப கூட்டாண்மைகள் அமைத்து, உலகளாவிய சவால்களுக்கு சேர்ந்து தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

