ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்சித் தலைமை கட்டுப்பாடு

அரசியல் ஆப்கானிஸ்தான் ஆப்ரிக்க நாடுகள் ஆளுமை/விருது கண்டுபிடிப்பு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கில் தவெக கட்சி தலைமை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், தலைமைக் கழகத்தின் முன் அனுமதி இல்லாமல் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் யாரும் எந்த ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என்று தெளிவுபடுத்தினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரடி பேட்டிகள், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அளிக்கும் நேர்காணல்கள் அனைத்துக்கும் தலைமையின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என்றும் கூறினார். இந்த உத்தரவை மீறி எந்த மாநில அல்லது தேசிய ஊடக தளங்களிலும் பேசக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *