பிளவுபடுகிறதா அதிமுக?

செய்திகள்

தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றிருந்த நிலையில் மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆளுங்கட்சியாய் இருந்த அதிமுக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.

அதிமுக கட்சியின் சட்டமன்ற தலைவர் யார் என்பதைத் தேர்வு செய்வதில் அக்கட்சி இதுவரை தடுமாறி வந்திருந்த நிலையில், திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை எதிர்க்கட்சித் தலைவராய் தேர்ந்தெடுத்திருப்பதாய் அக்கட்சியின் சார்பாய் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாதாய் சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று மணி நேரமாய் முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஈபிஎஸ் ஆகிய இருவருக்குமிடையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியதாகவும், வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தீர்மானிக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு கடுமையாக வலியுறுத்தியதாகவும், தலைவராய் ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டதும், அதிருப்தியோடு கூட்டத்தை விட்டு ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் வெளியேறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை இணக்கமாக இருந்து செயல்பட்டுவந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு கட்சியையும் அதன் எதிர்காலத்தையும் பாதிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இனி நடக்க இருப்பது என்ன என்பதற்கு வரும் காலமே பதில் சொல்லும்.

Leave a Reply

Your email address will not be published.