சென்னையில் Pro kabaddi லீக் போட்டிகள்; கோப்பையை தட்டிச் செல்லுமா தமிழ் தலைவாஸ்?

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை விளையாட்டு

Pro Kabaddi என்பது இந்தியாவில் நடைபெறும் தொழில்முறை கபடி தொடர் ஆகும். ஒவ்வொரு அணிக்கும் 7 starting players மற்றும் 5 substitutes இருக்கும். ஒரு ஆட்டம் இரண்டு ஹால்கள், ஒவ்வொன்றும் 20 நிமிடங்கள் நீடிக்கும். ஆட்டத்தில் Raid, Defence, Bonus, All Out போன்ற விதிகள் மூலம் புள்ளிகள் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு leg-லும் அனைத்து அணிகளும் குறிப்பிட்ட நகரத்தில் பல ஆட்டங்களை விளையாடி புள்ளிகளை சேர்க்கின்றனர். வெற்றி, தோல்வி மற்றும் புள்ளிகள் அடிப்படையில் Points Table உருவாகிறது.
கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கிய Pro Kabaddi League Season 12-ன் 3-வது கட்ட போட்டிகள் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்குகின்றன. ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு, சென்னை ரசிகர்கள் நேரடியாக ஆட்டங்களை பார்க்கும் வாய்ப்பில் உற்சாகமாய் உள்ளனர். அக்டோபர் 10-ந் தேதி வரை மொத்தம் 24 லீக் ஆட்டங்கள் நடக்க உள்ளன.
ஆண்டுகளுக்குப் பிறகு லீக் மீண்டும் சென்னையில் நடக்கிறது. தமிழ்நாடு இந்தியாவின் மிக சிறந்த கபடி மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த சீசன் மிக சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த சீசனைக் காட்டிலும் அதிக ‘சூப்பர் 10’ ரைடுகளை காண முடிகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிட அணிக்கும், 8-வது இடத்தில் உள்ள அணிக்கும் இடையே வெறும் 6 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.
இந்த சீசனில் மொத்தம் 12 தமிழ்நாட்டு வீரர்கள் வெவ்வேறு அணிகளில் விளையாடுகிறார்கள். இதுவரை மொத்தம் 52 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. புள்ளிப்பட்டியலில் முன்னாள் சாம்பியன்கள் தபாங் டெல்லி 7 வெற்றி, 1 தோல்வி, 14 புள்ளிகளுடன் முதலிடத்தில், Puneri Paltan 6 வெற்றி, 3 தோல்வி, 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். Tamil Thalaivas 4 வெற்றி, 5 தோல்வி, 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *