பிரதமர் மோடியின் டீசர்ட் : திருப்பூருக்கே பெருமை – எஸ்சிஎம் கார்மெண்ட்ஸ் நிறுவனர் மகிழ்ச்சி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடி அளவில் பின்னலாடை துணி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பின்னலாடை உற்பத்தியில் சிறந்து விளங்கக்கூடிய திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் ஒரு
பெருமை சேர்க்கக் கூடிய வகையில் இந்தியப் பிரதமர் திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை
நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணியை அணிந்தது பெருமையாக இருப்பதாக
பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி முதல் நாள் சென்னையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது நாள் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள பாகன் தம்பதிகளான பொம்மன் பெள்ளி ஆகியோரை சந்தித்து உரையாடினார் .
அப்போது அவர் அணிந்து வந்திருந்த கேமோப்ளாஜ் டீ சர்ட் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. ராணுவ மிடுக்கில் பிரதமர் மோடி உடை அணிந்திருந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவை திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
திருப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை சில்க்ஸ் குழுமத்தின் எஸ் சி எம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கேமோ பிளாஜ் டீசர்ட் என்பது தெரியவந்துள்ளது.
காடுகளில் வேட்டைக்கு செல்கிறவர்கள், சுற்றிப்பார்க்க செல்கிறவர்கள், மலையேற்ற பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளது. கோடை மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற 100 சதவீதம் காட்டனால் தயாரிக்கப்பட்ட உடை என்பது இதன் சிறப்பம்சமாகும். இயற்கையை பறைசாற்றும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த வகையிலான உடையை பிரதமர் மோடி அணிந்து சென்றிருப்பது மற்றும் தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது சென்னை சில்க்ஸ் குழுமத்திற்கும் , எஸ் சி எம் நிறுவனத்திற்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க கூடிய வகையில் உள்ளது” என பரமசிவம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *