ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்த பிரதமர் மோடி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார் சென்னை விமானநிலையத்தில் இருந்து அண்ணா சாலையில் வந்த பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசி வரும் பிரதமர் மோடி, ‘’வணக்கம் சென்னை என்று கூறி உரையைத் தொடங்கினார். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் உற்சாகமாக உணர்கிறேன். இளம் திறனாளர்களை அதிகமாக கொண்டுள்ளது சென்னை. தமிழ்நாட்டிற்கும் எனக்கும் இருக்கும் உறவு மிகவும் பழமையானது. நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பழமையானது. நான் தமிழ்நாட்டிற்கு வரும்போது சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது. காரணம் என்ன தெரியுமா பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருவது தான் என்றார்.
மூன்றாவது முறை எனது ஆட்சியில் இந்தியா உலகின் 3-ஆவது பெரும் பொருளாதாரமாக மாறும். சென்னையில் ரூ.1,000 கோடி மதிப்பில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை தந்துள்ளோம். சென்னை மெட்ரோ, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட மிகப்பெரிய திட்டங்களை பாஜக அரசு கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டை சிறப்பானதாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம். சென்னைக்கு பல்லாயிரக்கணக்கான கோடியில் திட்டங்களைக் கொடுத்துள்ளோம்.மிக்ஜாம் புயலின்போது மக்களுக்கு உதவ வேண்டிய திமுக அரசு, எந்தவொரு பொருட்டாகவும் கருதவில்லை. மக்களின் சுகதுக்கங்களில் மாநில அரசுக்கு அக்கறையில்லை என்றார்.

