இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை பெற்றுள்ளார். ஸ்வீடன் நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் கோதன்பர்க் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார்.இந்தியா மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது. மேலும், அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தையும் பாராட்டும் வகையில் இந்த கவுரவம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்வீடன் இளவரசி விக்டோரியா, பிரதமர் மோடிக்கு இந்த விருதை வழங்கி சிறப்பித்தார். இதன் மூலம் பிரதமர் மோடி இதுவரை 31வது சர்வதேச உயரிய விருதை பெற்றுள்ளார்.இந்த விருது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் பேசியபோது, “இந்தியாவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் இரு நாட்டு மக்களிடையே உள்ள அன்பிற்காக இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

