ஐபிஎல் 2025 இந்தியன் ப்ரீமியர் லீக் 18-வது தொடரானது இன்று மிகுந்த உற்சாகத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசை தேர்தெடுத்துள்ளது . மேலும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டியாகும். ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் பிரபல வீரர் விராட் கோலிக்கு இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தது. விராட் கோலியின் கிரிக்கெட் ஜெர்சி எண்ணான ’18’ என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது.
