பாமக சார்பில், உழவர் மாநாடு இன்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்க நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, மேல்மா சிப்காட்டில் 3 ஆயிரத்து 500 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை தடுத்து நிறுத்தியது பாமக. உலகில் எத்தனையோ கொடுங்கோல் ஆட்சிகள் நடைபெற்றது. வெள்ளக்காரன் ஆட்சியை விட தற்போது திமுக ஆட்சியில் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த கொடுங்கோல் ஆட்சி திமுக என குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் ஒரு சென்ட் நிலம் எடுத்தாலும் அந்த இடத்தில் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியும் நிற்கும். டங்ஸ்டன் தொழிற்சாலை தூத்துக்குடி வேதாந்தா நிறுவனம் தான் தொடங்க உள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் நான் பதவியில் இருக்கும் வரை டங்ஸ்டன் நிறுவனத்தை தொடங்க விடமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். மேலூரில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலத்தை எடுத்து விட மாட்டேன் என கூறும் முதலமைச்சர், நெய்வேலியில் 50,000 ஏக்கர் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்து இரட்டை வேடம் போடுவதாக குறிப்பிட்டார். விவசாயிகளை படுகொலை தள்ளக்கூடிய திராவிட மாடல் அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று பேசினார்.
டிசம்பர் 23-ஆம் தேதி சரண் சிங் பிறந்தநாள் விழா, உழவருக்காக வாழ்ந்து உழைத்தவர். ஜமீன்தார் முறை ஒழிப்பு சட்டம், உழைப்பவர்களுக்கு நிலம் சொந்தம் என உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே முற்றுகை போராட்டம் நடைபெறும். அந்தப் போராட்டம் 2025-ல் நடைபெறும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று பேசினார்.

