விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை போலந்தின் இகா ஸ்வியாடெக் வென்றார்

இங்கிலாந்து உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று 8-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.
இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். விம்பிள்டன் தொடரில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். ஒட்டுமொத்தமாக இகா ஸ்வியாடெக் வென்றுள்ள 6-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
நேற்று முன்தினம் இரவு ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 3-6, 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜன்னிக் சின்னர், நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *