சி.ஏ. தேர்வு முறையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி, சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் என மூன்று மாதங்களில் இறுதி தேர்வுகள் நடைபெறும். மேலும், இன்பர்மேஷன் சிஸ்டம் ஆடிட் தேர்வுகள் பிப்ரவரி, ஜூன், மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை நிறுவனம் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

