இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவராக எரிக் கார்செட்டி நியமனம் – வெள்ளை மாளிகை அறிவிப்பு

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் வட அமெரிக்கா

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை அதிபர் ஜோ பைடன் மீண்டும் நியமனம் செய்தார். 
அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்ற பின்னர் நிர்வாக ரீதியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரும் தற்போது புதிதாக நியமிக்க ஆயத்த பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தூதர் பதவிக்கு எரிக் கார்சேட்டியை அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் மேயராகவும், 12 ஆண்டுகளாக நகர மேம்பாட்டுக் குழுவில் பணியாற்றிய எரிக் கார்செட்டி கடந்த ஆண்டு இந்தியாவுக்கான தூதராக பரிதுரைக்கப்பட்டிருந்தார். ஓராண்டுக்குப் பிறகு தற்போது தூதராக பதவி பெற்றுள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவராக இருந்த கென்னெத் ஜஸ்டரின் பதவியில் தற்பொழுது எரிக் கார்செட்டி அமர்த்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.