புது முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது தமிழ்நாடு அரசு – 9 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

Nri தமிழ் வணிகம் அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி வேலைவாய்ப்புச் செய்திகள்

தமிழகத்தில் சுமார் 15ஆயிரம் கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 
ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் கிட்டதட்ட 9 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் முதலீடுகள் வருகின்றன. 
8 புதிய திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
தென் தமிழகத்தில் ஏராளமான முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.