சிட்னியில் இந்திய வம்சாவளியினர் தங்கள் பாரம்பரிய விழாக்களை கொண்டாடும் மையத்துக்கு மோடி வருகையையொட்டி லிட்டில் இந்தியா என்று பெயர்சூட்டப்பட்டது.
ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், விமானத்தின் புகை மூலமாக ‘வெல்கம் மோடி’ என எழுதி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, சிட்னியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத்தின் தாண்டியா மற்றும் கர்பா நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இந்திய பிரதமர் மோடியை பாஸ் எனக் கூறி ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனிஸ் பாராட்டினார். அமெரிக்க பாடகர் புரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீனை விட பிரதமர் மோடி அதிக புகழ் மிக்கவராக திகழ்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டை சேர்ந்தவருக்கு இது போன்ற உற்சாக வரவேற்பை தான் பார்த்தது இல்லை என்றும் அல்பனிஸ் கூறினார்.
முன்னதாக சிட்னிக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க, விமானங்களில் இருந்து புகை வெளியேற்றப்பட்டு வெல்கம் மோடி என்ற எழுத்துக்கள் வானில் உருவாக்கப்பட்டன.
மேலும் சிட்னியில் இந்திய வம்சாவளியினர் தங்கள் பாரம்பரிய விழாக்களை கொண்டாடும் மையத்துக்கு மோடி வருகையையொட்டி லிட்டில் இந்தியா என்று பெயர்சூட்டப்பட்டது.