ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் மத்திய மாநில அரசுப் பணிகளில் சேர தேர்வான 70,000 ஊழியர்களுக்குப் பணி நியமன ஆணையைப் பிரதமர் மோடி காணொலி நிகழ்ச்சி மூலம் வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான ஒரு படியாக ரோஸ்கர் மேளா அமைகிறது.
வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி புதிதாக பணியில் அமர்த்தப்பட உள்ள நபர்களுக்கு 70 ஆயிரம் பணி நியமன கடிதத்தை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வின் போது பணியில் சேர உள்ள நபர்களுக்கு சிறப்பு உரையும் ஆற்றினார்.
ரோஸ்கர் மேளா (Rozgar Mela) இந்தியா முழுவதும் உள்ள 43 பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசு துறையில் உள்ள பல்வேறு காலியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கும் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
நிதி சேவைகள் துறை, தபால்துறை, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, பாதுகாப்புத் துறை, வருவாய் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, அணு சக்தி துறை, ரயில்வே துறை, தணிக்கை மற்றும் கணக்குத் துறை, உள்துறை அமைச்சகம் உட்பட பல துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப இந்தியா முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அரசு ஊழியர்களாக இந்நிகழ்ச்சியின் மூலம் பொறுப்பேற்கிறார்கள்.
ரோஸ்கர் மேளா வேலை வாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதாகவும் அமைகிறது. அது மட்டும் அல்லாமல் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க ரோஸ்கர் மேளா ஒரு வாய்ப்பு அளிக்கிறது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் iGOT கர்மயோகி போர்டலில் உள்ள ஆன்லைன் மாட்யூலான கர்மயோகி பிரராம்ப்பில் (Karmayogi Prarambh) பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினை பெறுவார்கள். இதில் உள்ள ‘Anywhere any device’ கற்கும் முறை மூலமாக கிடைக்கும் 400 -க்கும் அதிகமான ஆன்லைன் வழி கோர்ஸ்கள் உள்ளன.

