ஐபிஎல் வரலாற்றில் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா ஐபிஎல் தொடர் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு பொழுதுபோக்கு விளையாட்டு

சிஎஸ்கே அணியின் வீரர் அஸ்வின், ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். 18-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் ஆரம்பித்து முதல் கட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், சென்னை அணி ,மும்பை அணியுடன் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில், தமிழக வீரர் மற்றும் சிஎஸ்கே வீரர் அஸ்வின், ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் மட்டும் சுழல்பந்து வீச்சாளர்களில் முதல்முறையாக 50 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இதனை குறிப்பிடும் வகையில், சிஎஸ்கே அணி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “பவர்பிளேவில் அண்ணாத்த ஆட்டம்” எனக் குறிப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிஎஸ்கே தனது அடுத்த போட்டியை ஆர்சிபி அணியுடன் விலையாடவுள்ளது.வரும் மார்ச் 28ஆம் தேதி இப்போட்டி நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *