உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா ஜனவரி 13ஆம் தேதி ஆரம்பித்து, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறுகிறது. 45 நாட்கள் நீடிக்கும் இந்த நிகழ்வில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்காக வருகிறார்கள், இதுவரை 38 கோடி பேர் புனித நீராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு பதிவு இன்று நடைபெற்றது இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் படகில் சென்று புனித நீராடினார். அதனை தொடர்ந்து கங்கைக்கு பிரார்த்தனை செய்து வழிபட்டார். பிரதமர் மோடியின் கும்பமேளா புனித நீராடல், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த வாரம், காவி வேட்டி அணிந்த அமித் ஷா திரிவேணி சங்கத்தில் புனித நீராடினார்.மேலும், யோகி ஆதித்யாநாத், பாபா ராம்தேவ் மற்றும் பல்வேறு துறவிகள் அவருடன் புனித நீராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

