பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடக்கம்.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கோயில்கள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள்

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பழனி பெரியநாயகியம்மன் கோவிலில், 5ம் தேதி காலை, தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வு பிப்ரவரி மாதம் 10ம் தேதி வெள்ளித் தேரோட்டம், திருக்கல்யாணம், மற்றும் 15ம் தேதி தெப்பத்தோ் உலாவும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. தைப்பூசத்திற்கான பாதயாத்திரைக்கு, 20 நாட்களில் 4 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டு உள்ளது. தைப்பூசத்தையொட்டி, மலைக் கோயிலில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணியைப் போலவே, பழனியிலும் தேரோட்டத் திருநாளின் அருகிலுள்ள இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கான இலவச பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *