ஒன்றிய அரசு, பிரதமர் அலுவலகத்தின் பெயரை ‘சேவா தீர்த்’ என்று மாற்றப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய பெயர், “புனிதமான சேவைத்தலம்” என்ற பொருள் கொண்டது. பிரதமர் அலுவலகம் அமைச்சரவைச் செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் இந்தியா ஹவுஸ் போன்ற முக்கிய அலுவலகங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இது நாட்டிற்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடமாகவும் செயல்படும். ஆட்சி என்பது ‘அதிகாரம்’ என்பதிலிருந்து ‘சேவை’ என்பதுக்குத் திசை மாறி வருவதாகும். “அரசின் ஒவ்வொரு கட்டிடமும், பெயரும், சின்னமும் ஒரே செய்தியைச் சொல்கிறது — அரசு என்பது மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பு,” என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை உள்ள ராஜ்பாத், ‘கர்த்தவ்ய பாதை’ என மறுபெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

