புதுச்சேரியில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக ரோடு ஷோக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், ஆனால் திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.வரும் 5-ம் தேதி புதுச்சேரி காலாப்பட்டில் இருந்து கன்னியக்கோவில் வரை சுமார் 30 கிலோமீட்டர் ரோடு ஷோ நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக தவெக நிர்வாகிகள் கடந்த வாரமே டிஜிபியிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மீண்டும் கோரிக்கை வைத்தாலும், அரசு இதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளது.

