இண்டிகோவில் ஏற்பட்ட சேவை சிக்கல்களுக்கு டிசம்பர் 15 வரை பயணத்தை மாற்றலாம்: மன்னிப்பு கேட்ட இண்டிகோ

இந்தியா உலகம் சிறப்பு சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு

இண்டிகோ நிறுவனம் இன்று ஒரே நாளில் 550 விமான சேவைகளை ரத்து செய்ததால், ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். இந்த நிலையையடுத்து, நிறுவனம் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டு, பயணிகளின் அசௌகரியத்தை வருந்துவதாக தெரிவித்துள்ளது. “ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு பதிலாக பயணிகள் டிசம்பர் 15 வரை எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம். மேலும் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளுக்கு முழு தொகையும் அவர்களின் கணக்கில் திருப்பி செலுத்தப்படும்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *