குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.1000-த்திலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் அரசு, அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு அனைத்து நாட்களும் மதிய உணவில் முட்டை வழங்கப்படும். தற்போது 3 நாட்கள் மட்டுமே முட்டை வழங்கப்படும் நிலையில் பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.
மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் மழைக்கால நிவாரணமாக ரூ.2,000 வழங்கப்படும் என்றும், அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிப்பு. இதுதவிர காரைக்கால் அம்மையார் பெயரில் கலை பண்பாட்டு துறை சார்பில் விருது வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி) படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என புதுச்சேரி நிதியமைச்சரும், முதலமைச்சருமான ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவிப்பு.
