நூறு ஜென்மம் எடுத்தாலும் நடிகனாகவே பிறப்பேன்” – கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்தின் உரை

ஆளுமை/விருது இந்தியா சிறப்பு சினிமா செய்திகள் பொழுதுபோக்கு

கோவாவில் நவம்பர் 20ம் தேதி தொடங்கிய 50வது சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் முதன்முதலாக 1975ல் கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தனித்துவமான நடிப்பாலும் ஸ்டைலாலும் அவர் விரைவில் “சூப்பர் ஸ்டார்” என்ற பெயரைப் பெற்றார். 1975ல் தொடங்கிய அவரது திரையுலக பயணம், 2025 ஆகஸ்ட் மாதத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த முக்கியமான 50 ஆண்டுகால சாதனையை நினைவுகூரும் வகையில் ரஜினிகாந்துக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பிறகு அவர் மனமார்ந்த நன்றி கூறி, “என் சினிமா பயணத்தில் தமிழ் மக்கள் அளித்த அன்பு, ஆதரவுக்கு இதயம் கனிந்த நன்றி. என்னை நேசித்த ரசிகர்கள் அனைவருக்கும் என்றும் கடன் பட்டவன் நான். எனக்கு சினிமாவும் நடிப்பும் மிகப் பிடிக்கும். 100 ஜென்மங்கள் இருந்தாலும் அதிலும் நடிகராகவே, ரஜினியாகவே பிறக்க விருப்பம். 50 ஆண்டுகளை திரும்பிப் பார்த்தால், அது 10–15 ஆண்டுகள் மாதிரி தான் தோன்றுகிறது,” என்று உருக்கமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *